• தமிழக நாடார்கள்

ஒடுக்கப்பட்ட ஒரு சமுதாயம் அரசியல் பண்பாட்டால் எவ்வாறு முன்னேற்றமடைந்திருக்கிறது என்பதைக் கொள்ள உதவும் புத்தகம் 
--------------------------------------------------------------
தென்னிந்தியாவில் உள்ள பல்வேறு சமுதாயங்களில், கடந்த இருநூறு ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றத்தின் தாக்கத்தைத் தெளிவாகச் சான்றுரைப்பவர்கள் நாடார்கள்தான் எனலாம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உயர்சாதி இந்துக்களால் மிகக் கீழான வகுப்பினராக - கள்ளிறக்குபவர்களாகவும் பனையேறிகளாகவும் கருதப்பட்ட நாடார்கள், மிகக் கடுமையான சமூக இயலாமைகளால் துன்பம் அனுபவித்தவர்கள். தமிழ்நாட்டில் மிக மோசமான ஒடுக்குதல்களுக்கு உட்பட்டிருந்த சமுதாயங்களில் தாங்களும் ஒன்றாக இருந்தார்கள்.

கடந்த ஒன்றரை நூற்றாண்டாக நிகழ்ந்த சமூக, பொருளாதார மாற்றத்திற்கு நுண்ணுணர்வுடன் எதிர்வினை ஆற்றுபவர்களாக இருந்ததால், நாடார்கள் இன்று பொருளாதாரத்துறை அரசியல்துறை இரண்டிலும் தெற்கில் மிக வெற்றிபெற்ற குழுவினராகவும், தங்கள் முயற்சியாலும் சாதனையாலும் மரியாதையைப் பெறுகின்றவர்களாகவும் உள்ளனர். அவர்களது இனத்திலிருந்து வணிக முன்னோடிகள், தொழிலதிபர்கள், வாழ்க்கைத்தொழில் செய்வோர் பலர் தோன்றியுள்ளனர். அரசியலில், அவர்களின் திறன்மிக்க வழித்தோன்றலான காமராஜர், தமிழக முதலமைச்சராகவும் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்து தமது இனத்திற்குப் புகழளித்துள்ளார்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

தமிழக நாடார்கள்

  • ₹ 480
  • ₹ 455


Tags: தமிழக-நாடார்கள், tamizhaga-naadaargal, அடையாளம்-பதிப்பகம், adaiyalam-publications

Crea
Ethir Veliyeedu
NCBH
Discovery Book Palace
Klachuvadu
Sandhiya Pathippagam
பாரதி புத்தகாலயம்
Kizhakku Pathippagam
Nattrinai Pathippagam
NBT India
Sakithiya Akadmy
Karuppu Pirathigal
Adaiyalam