• 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நிலம்

தொல்லியல் நோக்கில் சங்ககால நில வரைபடம்

இன்று கணினித் தொழில்நுட்ப வளர்ச்சியால் நம் வீடு இருக்கும் தெருவரை நில வரைபடத்தில் வந்துவிட்டது. மின்சாரமோ, போக்குவரத்து வசதியோ இல்லாத 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தில் நிலவரைபடம் இருப்பதற்கான சாத்தியம் அறவே இல்லை. எனினும், அக்காலத்தில் வணிகம் நடைபெற்றிருக்கிறது. ரோமிலிருந்து முசிறி துறைமுகம் வரை வந்து வணிகம் செய்திருக்கிறார்கள். 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தின் நில வரைபடத்தை பழந்தமிழ் இலக்கிய நூல்களில் காணப்படும் செய்திகளின் அடிப்படையில் இந்நூலாசிரியர் உருவாக்கியிருக்கிறார்.

'வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்தில்' உள்ள வேங்கடமலை, பழனிமலை, பறம்புமலை (பிரான்மலை), கொல்லி மலை, ஜவ்வாது மலை ஆகியவற்றைப் பற்றியும் அவற்றைச் சுற்றியுள்ள ஊர்கள் பற்றியும் சங்க இலக்கியத்தில் கிடைக்கும் செய்திகளின் அடிப்படையில் கண்டறிந்து, அவற்றுக்கான நில வரைபடங்களை உருவாக்கியுள்ளார். இவை தவிர, காவிரிப்பூம்பட்டினம், மருங்கூர் பட்டினம், உறையூர் கருவூர் (கரூர்), கொடுமணல், கூடல்நகர் (மதுரை), காஞ்சிபுரம் முதலிய ஊர்களையும், அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளின் நில வரைபடங்களையும் ஆசிரியர் உருவாக்கியுள்ளார்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நிலம்

  • ₹ 120
  • ₹ 110


Related Products

Tags: 2000-ஆண்டுகளுக்கு-முந்தைய-தமிழ்-நிலம், 2000-aandugalukku-munthaiya-tamilnilam, அலைகள்-வெளியீட்டகம், alaigal-veliyeettagam

Crea
Ethir Veliyeedu
NCBH
Discovery Book Palace
Klachuvadu
Sandhiya Pathippagam
பாரதி புத்தகாலயம்
Kizhakku Pathippagam
Nattrinai Pathippagam
NBT India
Sakithiya Akadmy
Karuppu Pirathigal
Adaiyalam