About Us


புத்தகங்களே வீடு தேடி வரும்: (Puthinambooks Kathir)


வாசகர்களின் ரசனையை புரிந்துகொண்டு அவர்களுக்கேற்றாற்போல் இணையத்தின் வாயிலாகவும் பதிப்பகங்கள் புத்தங்களை விற்பனை செய்துவருகின்றன. ‘புதினம் புக்ஸ்’ (Puthinambooks Kathir) என்ற புத்தக நிலையத்தின் கதிரேசன் சேகர் ஃபேஸ்புக் மூலமாகவே முழுவதும் புத்தக விற்பனை செய்கிறார். குறிப்பிட்ட புத்தகத்தைப் பற்றிய விவாதம் ஃபேஸ்புக்கில் எங்காவது நடக்குமென்றால் அங்கே போய் அந்தப் புத்தகம் தங்களிடம் கிடைக்கும் என்பதைப் பதிவுசெய்கிறார். புத்தகங்களை வாங்க விரும்புவோர் கதிரேசனின் கைபேசியைத் தொடர்புகொண்டு தெரிவித்தால் அந்தப் புத்தங்கள் தபால் வழியாக வாசகர்களின் வீட்டுக்கே வந்தடைகின்றன. இப்படியாக, புத்தகங்களைப் பெறுவதற்கான வழிகளை இணையம் எளிதாக்கி இருக்கிறது.


Source Link: http://tamil.thehindu.com/general/literature/வாசிப்பின்-புதிய-வெளி/article9657511.ece